தமிழகத்தில் தந்தையும் மகளும்கொலை விசராணைகள் தீவிரம்!!!

Murder
Murder

இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள வேலூர்- வேப்பங்குப்பம் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளியும், அவரது மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை )காலை பொன்னுச்சாமியும் அவரது மகள் தீபா(10) ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கொல்லப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், டி.ஐ.ஜி.காமினி, மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் செல்வக்குமார் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.