ட்ரம்பின் உடல்நிலைஆரோக்கியமாக உள்ளது என்கின்றனர் வைத்தியர்கள்

அதிருப்தி
அதிருப்தி

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி அடுத்து வரும் நாட்கள் ஆபத்தானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னரும் டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

74 அகவையைக் கொண்ட ட்ரம்ப், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முகக்கவசங்களையும் தவிர்த்து வந்தமையை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தநிலையில் அவரின் அகவை மற்றும் உடலின் நிறை என்பன கொரோனா தொற்றின் போது அவரை பாதிக்கின்ற காரணிகளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க நேரப்படி இன்று இரவு அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப், வோல்ட்டர் ரீட் வைத்தியசாலையில் இருந்து காணொளி ஒன்றின் ஊடாக அறிக்கை ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், அடுத்த சில நாட்கள் தமக்கு உண்மையான சோதனையாக இருக்கும் என்றும்,தாம் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தாம் குணம் பெற வேண்டும் என்பதற்காக வைத்தியசாலையின் பணியாளர்கள் தீவிர அக்கறை எடுத்துக்கொள்கின்றனர் என்றும், அமெரிக்க ஜனாதிபதி தமது டுவிட்டர் காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.