சிறிய கோள் ஒன்று பூமியின் வெளிப்புற சுற்றுப்பாதையை மோத வாய்ப்பு!

போயிங் 747 விமானம் அளவிலான சிறிய கோள் ஒன்று, இன்று (புதன்கிழமை) பூமியின் வெளிப்புற சுற்றுப்பாதையுடன் மோத வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாசாவின் சிறுகோள் கண்காணிப்பு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட 2020 ஆர்.கே. 2 என்ற சிறு கோள், பூமியில் இருந்து 23 இலட்சத்து 80 ஆயிரம் மைல் தொலைவில் சுற்றுப்பாதையை கடக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சுமார் 118 முதல் 265 அடி அகலம் கொண்ட இந்த சிறு கோள் வினாடிக்கு ஆறரை கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிப்பதாகவும், பூமியை கடந்து அதிக தூரம் வரை செல்லக்கூடும் எனவும் நாசா மதிப்பிட்டுள்ளது.