கேரளாவில் ஆலய அர்ச்சகர்கள் 10 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா!

கேரள மாநிலம்- திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி ஆலய அர்ச்சகர்கள் 10 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆலய செயற்பாட்டு அதிகாரி ரதீஷன், “அர்ச்சகர்கள் 10, ஊழியர்கள் 2பேர் என மொத்தம் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 15ஆம் திகதி வரை பக்தர்கள் ஆலயத்துக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஆலயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. எனினும் 12பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்மநாபசாமி ஆலயம், 4 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. பின்னர் பக்தர்களின் வேண்டுகோளுக்கமைய கடந்த ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி திறக்கப்பட்டது.

இந்நிலையிலேயே கோயில் அர்ச்சகர்கள் 10பேர் உட்பட 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.