அசர்பைஜான்- காஞ்சா தாக்குதலில் ஏழு பேர் உயிரிழப்பு!

47 1
47 1

அசர்பைஜானின் இரண்டாவது தலை நகரமான காஞ்சாவில் ஆர்மீனிய இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்ட சில மணிநேரங்களில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த பேச்சு வார்த்தையில் போரை நிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

அத்துடன், நாகோர்னோ-கராபக் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கைதான இரு நாட்டுப் படைவீரர்களின் இடமாற்றம் மற்றும் போரில் இறந்தவர்களை ஒப்படைப்பதற்காக போராட்டத்தை நிறுத்துவது உள்ளிட்ட விடயங்கள் பேச்சுவார்த்தையின் ஒப்புக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த சில நிமிடங்களிலேயே இரு தரப்பினரிடையே மோதல் நடைபெற்றுள்ளதுடன் இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டினை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .