இந்தியாவில் 24 மணிநேரத்தில் 813 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 813 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 67 ஆயிரத்து 757 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாகவும் இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்து 19 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளதோடு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 184 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியான 61 லட்சத்து 46 ஆயிரத்து 427 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 காரணமாக அதிகளவான உயிரிழப்புகள் இந்தியாவிலேயே பதிவாகியுள்ளன.

இந்தியாவை தொடந்து அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 325 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 77 லட்சத்து 46 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 காரணமாக சர்வதேச ரீதியில் 10 லட்சத்து 81 ஆயிரத்து 435 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் தொற்றுறுதியான 2 கோடியே 83 லட்சத்து 47 ஆயிரத்து 330 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.