பிரதமர் நரேந்திர மோடியினால் 75 ரூபாய் நாணயத்தாள் வெளியீடு

modi copy
modi copy

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையிலும் இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும் குறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் உலக உணவு தினத்தை முன்னிட்டு  அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்வின்போது பேசிய பிரதமர் மோடி  “உலக உணவுத் திட்டத்திற்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது ஒரு பெரிய சாதனை என்றும், இதில் நமது பங்களிப்பும் அதனுடன் இணைந்தது வரலாற்று சிறப்புமிக்கது என்பதில் இந்தியா மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.