புதிய இலச்சினையை வெளியிட்ட பேஸ்புக் !!

fb new logo
fb new logo

ஆப் மற்றும் நிறுவனத்துக்கு இடையே வேறுபாட்டை காண்பிக்கும் வகையில் பேஸ்புக் புதிய இலச்சினை வடிவமைக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் அப், மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப், அக்யூலஸ், வர்க்ப்ளேஸ், போர்டல் மற்றும் கேலிப்ரா ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

“மக்களுக்கும் தொழில் பங்குதாரர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தும் வகையிலும் எங்களது சேவையை வெளிப்படுத்தவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அண்டனியோ லூசியோ தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் தனது மதிப்பை அதிகரிக்கவே இத்தகையை புதிய மாற்றத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.