அந்தோனி பவுசியின் நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தக்கூடியது – அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிபுணர் அந்தோனி பவுசியின் (Anthony Fauci) நடவடிக்கைகள் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டிருந்த வேளை, அவர் மருத்துவ விஞ்ஞானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அந்தோனி பவுசியின் (Anthony Fauci) ) இன் பரிந்துரைக்கு அமைய நாம் செயல்பட்டிருந்தால் 5 லட்சம் அமெரிக்க மக்களை நாம் இழந்திருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அமெரிக்க செயல்திறன் பணிக்குழுவில் அந்தோனி பவுசி மற்றும் டொனால்ட் ரம்ப் ஆகியோரும் உறுப்பினர்களாக செயல்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில், குழுவின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக குழுவின் நடவடிக்கைகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

அமெரிக்காவில் இந்த அளவில் மரணம் ஏற்பட்டமை, டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.