ஈராக்கில் முன்னெடுக்கப்ட்ட வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் 44 பேர் காயம்

ElKjbV9WkAAU5T8
ElKjbV9WkAAU5T8

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வெகுஜன ஆர்ப்பாட்டங்களின்போது 11 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 44 பேர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நகரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதல்களின் விளைவாகவே 33 எதிர்ப்பாளர்கள் காயமடைந்துள்ளனர். 

அதேநேரம் அடையாளம் தெரியாத ஒருவர் கையெறி குண்டு வீசியதில் 11 பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்ததாகவும் காவற்துறை அதிகாரி ஹதீம் அல்-ஜாப்ரி குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர் என்று அல்-ஜாப்ரி சுட்டிக்காட்டினார்.

ஈராக்கில் அரசாங்கத்தின் நிர்வாக தாமத்தால் அந்நாட்டு பொருளாதார நிலை சரிவு கண்டது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகின. இதனை முன்வைத்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி பெருந் திரளான மக்கள் போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்தின் போது நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 565 ஈராக்கியர்கள் உயிரிழந்தாக ஆகஸ்ட் மாதம் ஈராக் அரசாங்கம் அறிவித்தது.

ஈராக்கில் மக்கள் இயக்கம் அடெல் அப்துல்-மஹ்தி தலைமையிலான முந்தைய அரசாங்கத்தை கவிழ்ப்பதில் வெற்றி பெற்றதுடன், தற்போதைய பிரதமர் முஸ்தபா அல் காதிமி மீது சேவைகளை மேம்படுத்துவதற்கும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் அவர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.