பிரான்சில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு!

114169151 114168611 063075804 1 1
114169151 114168611 063075804 1 1

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸில் மீண்டும் நாடு தழுவிய ரீதியிலான முடக்கல் நிலை அமுலாக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதற்கமைய, பிரான்ஸில் எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வரையில் இந்த நாடு தழுவிய ரீதியிலான முடக்கம் அமுலாக்கப்பட்டிருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுபானசாலைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற வர்த்த நிலையங்கள் இந்த காலப்பகுதியில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாடசாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியன தொடர்ந்தும் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 36 ஆயிரத்து 437 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.