சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

download 1 18
download 1 18

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 53 இலட்சத்து 12,762ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 இலட்சத்து 85,733ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உலகளவில் 5 இலட்சத்துக்கு அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் 91,330 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.