கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வில் தகவல்!

அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வில் கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் என்பது தெரியவந்துள்ளது.

இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இதயம், வைரஸால் மோசமடையும் ஆபத்து அதிகமுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ், சுவாச வைரஸ் எனவும் கூறப்படுகிறது. இது இதய தசையை நேரடியாக தாக்குமெனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க இருதய மருத்துவ கல்லூரி பத்திக்கை நடத்திய ஆய்விலும் 20 முதல் 30 வீதமான கொரோனா நோயாளிகளுக்கு இருதயத்தில் பிரச்சினை காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.