இளவரசர் வில்லியமிற்கு கொரோனா தொற்று!

பிரிட்டனின் இளவரசர் வில்லியம் அவரது தந்தை இளவரசர் சார்லஸுக்கு ஒத்த நேரத்தில் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றுக்குள்ளானதாக பிரிட்டிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கென்சிங்டன் அரண்மனை ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இந்த செய்தி வெளியானது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பேரனும், பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் இரண்டாவது வரிசையில் இருந்த வில்லியம், நாட்டு மக்கள் அச்சப்படுவார்கள் என்ற காரணத்தினால் தனது நோயறிதலை ஒரு இரகசியமாக வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.