அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்:வெள்ளை மாளிகைக்கு விசேட பாதுகாப்பு!

7ffeea5f gh
7ffeea5f gh

அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் தேர்தல் இன்று(04) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

உலகமே உற்று நோக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் தினத்திற்கு முன்பே சுமார் 9.5 கோடி வாக்குகள் தபால் மூலம் பதிவான நிலையில், மேலும் 6 கோடி வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, பெரும்பாலான வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்வதைத் தவிர்த்து, தபால் மூலம் வாக்களிக்க முடிவு செய்திருந்தனர்.

அத்துடன், தபால் வாக்குகளை பிரித்து எண்ணுவதற்கும் நேரம் எடுக்கும் என்பதால், இம்முறை தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் புளோரிடா, பென்சில்வேனியா, ஒகியோ, மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவு இழுபறியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இதேவேளை, தேர்தலையொட்டி வன்முறை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் வெள்ளை மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.