அமெரிக்காவில் இந்தியர் கத்தியால் குத்தி கொலை!

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த முகமது மொஹியூதின் என்ற (37வயது) இந்தியர் அங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மலிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில், அவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு அவரது உடல் காவல்துறையினரால் மீட்கப்பட்டு ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி முகமதுவின் மனைவி மெஹ்னாஸ் பாத்திமா கூறும்பொழுது, எங்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை காலை 9 மணியளவில் அவரிடம் நான் பேசினேன். அரை மணிநேரம் கழித்து மீண்டும் நான் தொலைபேசியில் அழைக்கிறேன் என என்னிடம் அவர் கூறினார்.

ஆனால், அதன் பின்னர் அவரிடம் இருந்து அழைப்பு வரவே இல்லை. பின்பு எனது உறவினர் வழியே, எனது கணவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரிய வந்தது.

அவரது உடல் ஜார்ஜியா மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் என வேறு யாரும் இல்லை.

நானும், எனது தந்தையும் அமெரிக்கா செல்ல அவசரகால விசாவுக்கு அரசு ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என வேண்டுகோளாக கேட்டுகொள்கிறேன். ஏனெனில், அதன்பின்பே அமெரிக்காவில் அவரது இறுதி சடங்குகளை நாங்கள் மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.