வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்: கடுமையாக எதிர்க்கும் ட்ரம்ப்!

150807051011 donald trump in debate 624x351 afp
150807051011 donald trump in debate 624x351 afp

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான போதிய இடங்களை ஜனநாயகக் கட்சி நெருங்கிவரும் சூழலில் வாக்கு எண்ணும் பணியை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் மூன்றாம் திகதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை நோக்கி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறிவருகிறார்.

இதுவரை, ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளதுடன் டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, பென்சில்வேனியா, வட கரோலினா, ஜோர்ஜியா, அலாஸ்கா மற்றும் நெவாடா ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவராமல் இழுபறியில் உள்ளன.

இதேனிடையே, நெவாடா மாநிலத்தில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் அதனைக் கைப்பற்றினால் ஆறு தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியைக் கைப்பற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது,

இதேவேளை, முடிவுகள் வெளிவராத பென்சில்வேனியா, வட கரோலினா, ஜோர்ஜியா, அலாஸ்கா ஆகிய மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.

இந்தச் சூழலில், நியூயோர்க், அரிசோனா ஆகிய மாநிலங்களில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை, தேர்தல் வாக்குகளை எண்ணுவதை இடைநிறுத்தும் வகையில்டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.