78 வயது முதியவரை மணந்த 17 வயது பெண்; 22 நாட்களில் விவாகரத்து!

இந்தோனேஷியாவில் 78 வயது முதியவர் 17 வயது சிறுமியை மணந்துகொண்டார். இவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமிருந்ததால் இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.

இந்நிலையில் திருமணமாகி சுமார் 22 நாட்களிலேயே மனைவி தன்னை ஏமாற்றியதாகக் கூறி முதியவர் விவாகரத்து கேட்டு பத்திரம் அனுப்பியுள்ளார்.

அதாவது திருமணத்திற்கு முன்பே தனது மனைவி கர்ப்பமாக இருந்துள்ளதாகவும் அதை மறைத்து தன்னை அப்பெண் திருமணம் செய்துகொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.