இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளது – எடப்பாடி பழனிசாமி

download 4 3
download 4 3

இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் குறைவு என கூறினார்கள் ஆனால் அங்கு தற்போது அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பரிசோதனை நடைபெறுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.