அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பிரபல பாடகர் உட்பட மூவர் பலி!

Tamil News large 2360261
Tamil News large 2360261

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரபல ராப் பாடகர் கிங் வான் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள கிளப் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், டேவோன் பேனட் எனும் இயற்பெயர் கொண்ட 26 வயதுடைய கிங் வான், தனது நண்பர்களுடன் கிளப் ஒன்றிற்கு சென்றிருந்த போது, அங்கு மற்றொரு குழுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின் தகராறு முற்றி இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.