இந்தியாவில் கொரோனா நோயாளர்களின் சிகிச்சையளிப்புக்காக ரோபோக்கள்!

இந்தியாவில் கொரோனா நோய்ப்பரவல் அதிகரித்துவருகின்ற நிலையில் நோயாளர்களுக்கான சிகிச்சையளிப்புக்காக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய நிறுவனம் ஒன்று 3 வகையான முக்கிய பணிகளின் அடிப்படையில் ரோபோக்களை இதற்காக தயாரித்துள்ளது.

சுத்திகரிப்பு, நோயாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்குதல் மற்றும் வைத்தியர்களுடன் காணொளி மூலமான தொடர்பாடலுக்கு உதவுதல் போன்ற பணிகளை இந்த ரோபோக்கள் மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளது.

இந்த காலப்பகுதியில் 550 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 86 இலட்சத்து 83 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.