பிரான்ஸில் டிசம்பர் மாதம் வரை ஊரடங்கு நீடிப்பு!

625.0.560.350.160.300.053.800.668.160.90 1 1
625.0.560.350.160.300.053.800.668.160.90 1 1

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு சட்டம் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தேசத்தின் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஜனாதிபதியுடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்.

இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்த நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பின் 2 ஆவது அலை கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 19.15 இலட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்குள்ளளாகி உள்ளனர். 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.