2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு!

Egypt 2
Egypt 2

கெய்ரோவுக்கு தெற்கே அமைந்துள்ள சக்காரா பகுதியில் குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டிகளையும், பெட்டிகளில் உள்ளே சில மம்மிகளையும், சுமார் 40 கில்டட் சிலைகளையும் கண்டுபிடித்துள்ளதாக எகிப்திய தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெம்பிசை தலைநகராகக் கொண்ட பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைகள் கொண்ட தொல்லியல் நகரமான சக்காராவில் அண்மையில் கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகளில் இது பிரதானமாக கருதப்படுகிறது.

எகிப்தில் இறுதியாக ஆட்சி செய்த 26 ஆவது வம்சாவளி மன்னர்களின் சடலங்களாக இந்த மம்மிகள் இருக்கலாம் என ஊகித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த சவப்பெட்டிகள் முத்திரையிடப்பட்டு, நேர்த்தியாக, வர்ணம் பூசப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

யுனெஸ்கோவின் இந்த பாரம்பரிய தளத்தில் ஆகஸ்ட் மாதம் 59 சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இந் நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சவப்பெட்டிகளும், அதனுடன் தொடர்புடைய மம்மிகளும், கலைப்பொருட்களும் எகிப்தின் ‍பிரமாண்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.