பிரான்ஸ் கடற்கரையில் பெருமளவில் போதைப்பொருட்கள்

france cocaine
france cocaine

பிரான்ஸ் நாட்டில் மேற்கு பகுதியில் 300 மைல் தொலைவில் உள்ள கடற்கரைகளில் போதை மருந்து பொதிகள் வந்தடைந்த வண்ணமுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த போதைப்பொருள் பொதிகள் எங்கிருந்து வருகின்றதென தெரியாமல் அதிகாரிகள் குழம்பி வருகின்றனர்.

இது தொடர்பில் பிரான்ஸ் நாட்டு அதிகரிகள் தெரிவிக்கையில்;

இதுவரை 870 கிலோ அளவிலான போதை மருந்துகள் கரையை வந்தடைந்துள்ளதாகவும் அவற்றின் மதிப்பு 92 மில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக 10இற்கும் மேற்பட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவைகளுள் பெரும்பாலானவை மரணத்தை ஏற்படுத்தக்கூடியவை என தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.