தென்கொரியாவில் தோற்றம் பெற்ற இரத்த ஆறு!

s.koria
s.koria

தென்கொரியாவின் இம்ஜின் ஆறானது சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

தென்கொரியாவில், ஆபிரிக்க பன்றி காய்ச்சல் பரவுவதனை தடுக்கும் நோக்கில் சுமார் 47 ஆயிரம் பன்றிகளை அந்த நாட்டு அதிகாரிகள் கொன்று குவித்தனர். கொல்லப்பட்ட பன்றிகளின் உடல்களை வடகொரியாவில் எல்லையையொட்டி இருக்கும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியில் ஓடும் இம்ஜின் ஆற்றுக்கு அருகில் புதைத்தனர்.

இந்நிலையில் அப்பகுதிகளில் பெய்த கனத்த மழை காரணமாக கொல்லப்பட்ட பன்றிகளின் இரத்தம் வழிந்தோடி இம்ஜின் ஆற்றில் கலந்தது. இதனால் ஆறு முழுவதும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

எனினும் புதைக்கப்பட்ட பன்றிகளின் உடல்கள் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டதாகவும், எனவே மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் ஆற்றில் இரத்தம் கலக்காமல் இருக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.