ஜனாதிபதியை பதவி விலகக்கோரி ஹெயிட்டியில் போராட்டம்!

5fb5e97d0da63868dc33a8ba o U v2 720x450 1
5fb5e97d0da63868dc33a8ba o U v2 720x450 1

ஹெயிட்டி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில், ஜனாதிபதியை பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஹெயிட்டிய புரட்சியின் கடைசி பெரிய போரின் 217ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு தேசிய விடுமுறையில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அங்கு உள்ளூர் படைகள் நெப்போலியனின் பிரெஞ்சு பயணப் படைகளைத் தோற்கடித்தன.

எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து வன்முறையில் முடிய ஜனாதிபதி ஜோவனல் மோஸ், கடுமையான பாதுகாப்பின் கீழ், வீரர்களுக்கு தேசிய கல்லறையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். எதிர்ப்பாளர்கள் இப்பகுதியை அடைய முயன்றனர். ஆனால் பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டது.

பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததாகவும், வெளிநாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் பில்லியன்கணக்கான சர்வதேச உதவிகளைப் பறித்தவர்களைப் பொறுப்பேற்கத் தவறியதாகவும் மொய்ஸ் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் ஜனாதிபதியை பதவி விலகக்கோரி கோஷமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்ததோடு பொலிஸ் அதிகாரிகள் மீது பொருட்களை வீசினர். பதிலுக்கு, பொலிஸார் எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

இதன்போது ஒரு இளைஞன் தலையில் சுடப்பட்டதாவும், காயமடைந்தவரை மற்ற எதிர்ப்பாளர்கள் தூக்கி சென்றதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.