ஜேர்மனியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் நீடிப்பு!

5010 720x450 1
5010 720x450 1

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜேர்மனியில் உள்ள 16 மாநிலங்களின் தலைவர்களுடன் ஜேர்மன் ஆட்சியாளர் நேற்று கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பு முடுக்க செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பம் மாதம் 20 ஆம் திகதி நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிப்பதற்கு ஜேர்மன் ஆட்சியாளர் தீர்மானித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளதுடன் பொதுநிகழ்வுகளில் 10 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு குறிப்பிட்டளவிலான முடக்க செயற்பாடுகள் இலகுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உணவகங்கள், மதுபானசாலைகள், என்பன மூடப்பட்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.