அமெரிக்க பிரஜைகள் ஆறு பேருக்கு வெனிசுவேலாவில் சிறை!

11 1386739608 jail4 600
11 1386739608 jail4 600

வெனிசுவேலாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் பணிபுரிந்த அமெரிக்க பிரஜைகள் ஆறு பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவின் மத்திய எரிபொருள் நிறுவனத்துக்கு சொந்தமான சிட்கோ எனும் அமெரிக்க நிறுவனத்தில், குறித்த அனைவரும் பணிபுரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் குறித்த 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெனிசுவேலா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனினும் குறித்த அமெரிக்க பிரஜைகள் 6 பேரும் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.