இந்த வருடத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?

நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்டதாகவும், இந்த ஆண்டுக்கான வார்த்தையாகவும், தொற்று நோய் எனப் பொருள்படும் பண்டமிக் (Pandemic) வார்த்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் மெரியம் வெப்ஸ்டர்ஸ் (Merriam webster) என்ற நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் கூற்றுப்படி, சாதாரண ஒற்றைச் சொல், ஒரு சகாப்தத்தை நிர்ணயம் செய்வதாகத் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் கொரோனாத் தொற்றை பண்டமிக் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்ததும், அதற்கான விளக்கம் குறித்து அகராதிகளில் அதிகம் தேடப்பட்டதாக வெப்ஸ்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இது மற்ற தேடல்களை விட ஒரு லட்சத்து 15% அதிகம் என்றும் அந் நிறுவனம் கூறியுள்ளது.