அவுஸ்திரேலிய பிரதமர் பதிவிட்ட செய்தியை முடக்கிய சீனா

சீனாவின் சமூக வலைதள செயலியான வீ சட்டில் (wechat), அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் (Scott Morrison) பதிவிட்ட செய்தியை அந்நிறுவனம் முடக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய இராணுவம் போர்க்குற்றம் செய்ததை குறிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் குழுந்தையின் கழுத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் கத்தியை வைப்பது போன்ற படத்தை சீனா வெளியிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த மொரிஸன், சீனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சீனா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சீன அரசை விமர்சித்து வீ சட் தளத்தில் மொரிஸன் வெளியிட்ட பதிவை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.