அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 225,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202011260631246981 Worldwide the number of corona victims has risen to 607 SECVPF
202011260631246981 Worldwide the number of corona victims has risen to 607 SECVPF

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில், கடந்த 24 மணிநேரத்தில் 225,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவே அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் பதிவான முதல் முறையாகும்.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் மொத்தம் 14,343,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை கொரோனா தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 2,506 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதனை தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 278,605 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பணிப்பாளர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் கூறும் போது,

பெப்ரவரி மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 450,000 ஐ எட்டும். இந்த குளிர்காலம் நாட்டின் பொது சுகாதார வரலாற்றில் மிகவும் கடினமான நேரம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 65,925,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.