வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்!

mouth
mouth

வாய் துர்நாற்றத்தை இயற்கையான வழியில் குணமாக்க அற்புதமான சில தீர்வுகள் இதோ.

இலவங்கப்பட்டையை ஒரு கப் அளவு நீரில் போட்டு காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொண்டு அந்த நீரால் தினமும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

ஏலக்காய் விதைகளை தினமும் மென்று வருவதன் மூலம் இனிமையான, சுத்தமான சுவாச நிலையை பெறலாம்.

கிரம்பை மென்று வாயில், வெற்றிலையை போல அடக்கிக் கொள்ள வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம் உடனே போய்விடும்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்த கலவையால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால், வாய்துர்நாற்றத்தை தடுக்கலாம்.

கொத்தமல்லி ஒரு சிறந்த நறுமணப்பொருள் என்பதால், இதை வாயில் போட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும்.

குறிப்பு

தினமும் இருமுறை அவசியம் பற்களை சுத்தம் செய்யும் போது, நாக்கையும் சேர்த்து தவறாமல் சுத்தம் செய்து வந்தாலே, கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்கிவிடலாம்.