முதல்முறையாக கைகோர்க்கும் இளையராஜா – வெற்றிமாறன் கூட்டணி

vetrimaran iliyaraja 061220 400
vetrimaran iliyaraja 061220 400

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடச்சென்னை உள்ளிட்ட திரைப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சூரி நடிக்கும் வெற்றிமாறன் படத்திற்காக சூரி வேற லெவலில் தனது உடலை மாற்றியுள்ளார். அந்த புகைப்படங்க்ள சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் சூரி படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருக்கிறாராம் . வெற்றிமாறன் – இளையராஜா – பாரதிராஜா கூட்டணியில் ஆர்.எஸ் இன்.போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.