வெளிவந்த அதர்வாவின் குருதி ஆட்டம் பட டீசர்!

pic 2 1
pic 2 1

சாக்லேட் பாயாக வலம் வருபவர் அதர்வா. மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பானா காத்தாடி என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கினார்.

சமீபகாலமாக பல படங்களில் நடித்தாலும் இமைக்காநொடிகள் படத்தை தவிர வேறு எந்தப்படமும் அதர்வாவுக்கு பெரிய அளவில் பெயரையும் புகழையும் ஈட்டித் தர வில்லை.

மேலும் தமிழில் சூப்பர் ஹிட்டடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதர்வா. அடுத்தடுத்து தள்ளிப் போகாதே, ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதர்வாவுக்கு அடுத்ததாக தமிழில் ரிலீசாக இருக்கும் திரைப்படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக முதல் முறையாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் முருகானந்தம் தயாரித்திருக்கும் இந்த படத்தை 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.