அடுத்த ஆண்டை குறி வைக்கும் தளபதி விஜய்!

download 2 7
download 2 7

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தளபதி 65 திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக பெரிதும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதனால் அடுத்த ஆண்டு தளபதி விஜய்யின் நடிப்பில் மாஸ்டர் மற்றும் தளபதி 65 என இரு திரைப்படங்கள் வெளியாவதால், விஜய்க்கு அடுத்த வருடம் மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்று கூறப்படுகிறது.

எதுவாயினும் பொறுத்திருந்து பார்ப்போம், இரு படங்களின் வெளியிட்டுதிகதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக.