உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ள தனுஷ்!

201903202314531109 In the new movie Dhanush in 2 roles SECVPF
201903202314531109 In the new movie Dhanush in 2 roles SECVPF

தனுஷ் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் போன்ற படப்பிடிப்புகளை முடித்துவிட்டு அடுத்ததாக ஹிந்தியில் உருவாகும் அட்ராங்கி ரே எனும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வராகவனுடன் ஒரு படம் நடிக்க உள்ளாராம்.

அதனை தொடர்ந்து ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து தனுஷுக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றது. அந்த வரிசையில் இன்னொரு படத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

உலக புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிக்கப் போவதாகவும், அந்தப்படத்தை தனுஷின் முந்தைய ஹிந்தி படங்களான ரஞ்சனா மற்றும் அட்ராங்கி ரே படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் என்பவர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த். செஸ் போட்டிகளில் இவர் பெறாத பட்டமே கிடையாது. இந்நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாறு உருவாக இருக்கும் செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் உலவும் நிலையில் தனுஷும் ஒரு விளையாட்டு வீரர் வாழ்க்கை வரலாறு நடிக்கயிருப்பதாக செய்தி பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு இடையே இருக்கும் வியாபார போட்டியைப் பயன்படுத்தி யாரேனும் இதனை கிளப்பி விட்டார்களா என கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.