மாதவனின் மாறா திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

maaraa
maaraa

கொரோனாத் தொற்றுப் பாதிப்பு காரணமாக தமிழக்தில் கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் திரையரங்குகள் திறந்தாலும் அதிக அளவிலான திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடவே தயாரிப்பாளர்கள் விரும்பி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் மாதவன் நடித்த ’மாறா’ திரைப்படமும் தற்போது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவன் ஷாரதா ஸ்ரீநாத், ஷிவாதா, மெளலி அலெக்சாண்டர் பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.