மிருகத்தனமான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா!

201907010425063682 Samantha is the producer SECVPF
201907010425063682 Samantha is the producer SECVPF

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கொடூரமான வில்லி வேடத்தில் நடிக்கும் செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா நடிப்பில் 2019ஆம் ஆண்டு 4 படங்களும், 2020 ஆம் ஆண்டு ஒரே ஒரு படம் வெளியானது. கொரானா சூழ்நிலையால் எந்த ஒரு படத்திலும் நடிக்க முடியாத நிலையில் தற்போது மளமளவென்று புதிய படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளார் சமந்தா. இதனை தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் வெப்சீரிஸ் ஒன்றில் வில்லி வேடத்தில் நடித்துள்ளாராம். த ஃபேமிலி மேன் என்ற வெப்சீரிஸ் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறதாம்.

மனோஜ் பாய், பிரியாமணி, நீரஜ் மாதவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் சமந்தா கொடூரமான வில்லி வேடத்தில் நடித்துள்ளாராம். விரைவில் இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைப் பற்றிய சமந்தா கூறுகையில், வழக்கமான கமர்சியல் நாயகியாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டுதான் வில்லி வேடத்தில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம் நடிப்பில் வெளியான பத்துஎன்றதுக்குள்ள படத்தில் வில்லியாக நடித்து பல்பு வாங்கினார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.