11 வருடம் கழித்து பழைய ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜீவா!

Jiiva Aka Jeeva Img
Jiiva Aka Jeeva Img

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி மகன் ஜீவா. ஆனால் மிகப் பெரிய தயாரிப்பாளர் மகன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் சகஜமாக ஜீவா பழகுவதால் பல நடிகர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். அதேபோல் ஜீவாவின் படங்களும் முழுக்க முழுக்க பார்க்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சுறுசுறுப்பாக இருக்கும்.

ஜீவாவின் படங்களுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடையில் கொஞ்சம் மார்க்கெட்டை இழந்த ஜீவா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வளர்ந்து வரும் நடிகராக மாறிவிட்டார். நீண்ட நாட்களாகவே வளர்ந்து வரும் நடிகராக தான் இருக்கிறார் என்பது வேறு விஷயம்.

எப்படியாவது அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டுமென தனக்கு 11 வருடத்திற்கு முன்பு சூப்பர் ஹிட் படம் கொடுத்து தன்னுடைய சினிமா மார்க்கெட்டை உயர்த்தி விட்ட சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளாராம்.

சிவா மனசுல சக்தி படத்தைப் போலவே இந்தப் படமும் மிக மிக கலகலப்பாக இருக்கும் என அவரது தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. எம் ராஜேஷ் கடந்த சில படங்களால் தோல்வியை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் சிவா மனசுல சக்தி படத்தை பார்ப்பதற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு காட்சிக்கு காட்சி சுவாரசியமாகவும் காமெடியாகவும் ரசிகர்களை சிரிப்பில் தெறிக்க விட்டிருப்பார்கள்.

ஆனால் எம் ராஜேஷ் கூட்டணியில் வரும் படங்களில் சந்தானம் இல்லை என்றால் அது பீஸ் இல்லாத பிரியாணி போல தான் என்பது சமீப காலமாக நிரூபணமாகியுள்ளது.