ஒரு மணி நேரத்திற்கு 3 காரில் பயணம் செய்யும் ரித்திக் ரோஷன்!

pjimage 1600514046
pjimage 1600514046

பாலிவுட்டில் மிக அழகான நடிகர்களில் ஒருவர் ரித்திக் ரோஷன் . இவரது கண்ணும், உடல் கட்டமைப்பும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக இவரை கொண்டாடத் தொடங்கினர்.

ரித்திக் ரோஷன் சிறுவயதிலிருந்தே படத்தில் நடித்து வருகிறார். பள்ளி பருவ காலத்தில் ரித்திக் ரோஷன் சரளமாக பேச முடியாமல் திக்கித்திக்கி தான் பேசுவார். அதுமட்டுமில்லாமல் இவரது கையில் ஆறு விரல்கள் இருக்கும். அதனால் அவரது நண்பர்கள் அவரை கேலி, கிண்டல் செய்து வந்தனர்.

ரித்திக் ரோஷன் சிறுவயதிலிருந்தே படத்தில் நடித்து வருகிறார். பள்ளி பருவ காலத்தில் ரித்திக் ரோஷன் சரளமாக பேச முடியாமல் திக்கித்திக்கி தான் பேசுவார். அதுமட்டுமில்லாமல் இவரது கையில் ஆறு விரல்கள் இருக்கும். அதனால் அவரது நண்பர்கள் அவரை கேலி, கிண்டல் செய்து வந்தனர்.

என்னதான் கேலி கிண்டல் செய்தாலும் ரித்திக் ரோஷன் ஒரு காலத்தில் என்னால் சரளமாக பேச முடியும் என நினைத்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் விளைவாக அவர் நடிக்கும் படங்களில் அடுக்கடுக்கான வசனங்களை சரளமாக பேசி ரித்திக் ரோஷன் திரையில் வந்தாலே கைத்தட்டல் மற்றும் விசில்கள் பறக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதற்காக அவர் எந்த அளவு கஷ்டப்படுகிறார் என்பது யாருக்கும் தெரியாது. ரித்திக் ரோஷன்க்கு ஸ்கோலியோசிஸ் எனும் நோய் உள்ளது. ஸ்கோலியோசிஸ் நோய் என்பது மனிதனின் முதுகுத் தண்டு வளைவு மற்றும் தோள்பட்டை ஒரு பக்கமாக சாய்வதற்கு இந்த நோய் ஒரு முக்கிய காரணமாகும். இதனால் மருத்துவர்கள் இனிமேல் உன்னால் நடக்கவும் முடியாது, நடனமாடவும் முடியாது என கூறியுள்ளனர்.

ஆனால் அதெல்லாம் பொருட்படுத்தாமல் ரித்திக் ரோஷன், என்னால் நடக்க முடியும், அது மட்டும் இல்லாமல் நடனமாடவும் முடியும் என கூறி படங்களில் நடக்கவும் நடனமாடவும் ஆரம்பித்தார். ரித்திக் ரோஷன் முதுகுத்தண்டை நேர் செய்வதற்காக பல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தற்போது உடற்பயிற்சி செய்து வருகிறார்.

என்னதான் உடற்பயிற்சி செய்து வந்தாலும் ரித்திக் ரோஷன் ஒரே பொசிஷனில், ஒரே இடத்தில் இருபது நிமிடத்திற்கு மேல் அவரால் உட்கார முடியாது. அதற்காக ரித்திக் ரோஷன் ஆறு விதமான பொசிஷன்களில் உட்காரும்படி ஆறு விதமான கார்களை வடிவமைத்து வாங்கியுள்ளார்.

ரித்திக் ரோஷன் தொலைதூரம் காரில் பயணம் செய்வதாக இருந்தால் அவரது காருக்கு பின்னாடி ஆறு கார்கள் பின்தொடர்ந்து வரும். ஏனென்றால் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு சென்று உட்கார்ந்து கொள்வாராம். அந்த அளவிற்கு ஸ்கோலியோசிஸ் நோயால் பாதித்துள்ளார். தற்போது இவர் பென்ஸ், ரோல்ஸ்ராய்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற பல கார்கள் வைத்துள்ளார்.