வெளியாகிய ப்ரேமம் பட இயக்குனரின் அடுத்த பட போஸ்டர்!

56
56

ஒரே படத்தின் வாயிலாக உலகளவில் ரீச் பெரும் இயக்குனர்களும் உண்டு, அதற்கு உதாரணம் அல்போன்ஸ் புத்திரன். குறும்படங்கள், ஆல்பம் பாடல், விளம்பரம் என எடுத்து பின்பு சினிமாவில் நுழைந்தவர். பன்முக திறன் உடையவர். 2013 இல் நேரம் என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக 2015 இல் ப்ரேமம் வெளியானது. மொழி தெரியாத பலர் கூட இப்படத்தை பார்த்தனர்.

அதன் பிறகு இவர் நேரடி தமிழ் படம் பண்ணுகிறார், அருண் விஜய் ஹீரோ என்றனர், பின்னர் காளிதாஸ் ஜெயராமன் வைத்து மலையாளம் படம் என்றனர், எனினும் எதுவும் டேக் ஆப் ஆகவில்லை. இந்நிலையில் இவர் அடுத்து எடுக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பாட்டு– செப்டம்பர் மதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ஹீரோ பாஹத் பாசில் என்பது முன்பே வெளியான தகவல். இப்படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளார். ஒளிப்பதிவு, ஆனந்த் சந்திரன். படத்தை ஆல்வின் ஆண்டனி மற்றும் சகர்யா தாமஸ் தயாரிக்கின்றனர். இயக்கம், எடிட்டிங், இசை என அனைத்தையும் இயக்குனரே கவனித்துக் கொள்கிறாராம். எந்த புது மாதிரியும் இல்லாத சாதாரணம் படமாம் இது.