ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல்; 9 பேர் உயிரிழப்பு!

Kabul 720x380 1
Kabul 720x380 1

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக தலிபான்கள் – ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலிபான் மட்டுமல்லாமல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் காபுல் நகரில் இன்று கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தலிபான்களோ? அல்லது ஐஎஸ் பயங்கரவாத அமைப்போ? தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதல் ஆப்கானிஸ்தானில் எம்.பி.யாக செயல்பட்டு வரும் கான் முகமது வர்டக் என்பவரை குறிவைத்து நடத்தப்பட்டது. அதில் அவர் உயிர்தப்பிய நிலையில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.