சூரரை போற்று திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச கெளரவம்!

suriya aparna bala soorarai pottru 780x390 1
suriya aparna bala soorarai pottru 780x390 1

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ’சூரரை போற்று.

இத் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அனைவரும் அறிந்ததே.

மேலும் ஓடிடியில் வெளியான முதல் மாஸ் நடிகரின் படம் இதுதான் என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் விமர்சன அளவிலும் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இத் திரை படமானது தற்போது சர்வதேச அளவில் கெளரவம் பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள 78ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ’சூரரை போற்று’ படம் திரையிடப்பட உள்ளதாக சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சியில் உலக அளவில் மிகச் சில படங்கள் மட்டுமே திரையிடப்படவுள்ள நிலையில் அதில் சூர்யாவின் ’சூரரை போற்று’ திரைப்படமும் ஒன்று என்பது தமிழ் திரை உலகிற்கே ஒரு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.