ருத்ரன் எனும் படத்தில் நடிக்க உள்ள ராகவா லாரன்ஸ்!

1563971017 7125
1563971017 7125

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவர் அதே படத்தில் இயக்குனராக அறிமுகமாக உள்ள செய்தி குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் ஆகி விட்டது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

காஞ்சனா படங்களைத் தவிர ராகவா லாரன்ஸ் நடிக்கும் கமர்சியல் படங்கள் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்.

இந்நிலையில் ஆடுகளம் படத்தை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ருத்ரன் எனும் படத்தில் நடிக்க உள்ளார் ராகவா லாரன்ஸ். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் போஸ்டருடன் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் ருத்ரன் படத்தின் இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் தற்போது அந்த படத்தை ருத்ரன் படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன் என்பவரே இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராகவா லாரன்ஸ் ஒரு இயக்குனர் என்பதால் அவரே இந்த படத்தில் கதிரேசனுக்கு உதவி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் என்றால் அது காஞ்சனா 3 தான்.