ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தின் நாயகி இவர்தான்!

OIP 2
OIP 2

ராகவா லாரன்ஸ் இயக்கிய ’லட்சுமி’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் தலைப்பு ’ருத்ரன்’ என்று அறிவிக்கப்பட்டது.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் ஒரு திகில் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 3ஆம் வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ’ருத்ரன்’ திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானிசங்கர் இணையும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.