வருங்கால துணையை இப்படி தேர்வு செய்யுங்கள் – நடிகை ஷாலு ஷம்முவின் அறிவுரை

vikatan 2019 08 ab3098b8 e4ad 441c b122 7754f4576d21 news vbbf04f745ff78c4ede34cff326d4d47
vikatan 2019 08 ab3098b8 e4ad 441c b122 7754f4576d21 news vbbf04f745ff78c4ede34cff326d4d47

நடிகை ஷாலுஷம்மு  தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து  கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “உங்களுக்கு நல்லவராக இருக்கும் ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுங்கள். அவர் உங்கள் பெற்றோருக்கு நல்லவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உங்கள் பிம்பத்திற்கு நல்லவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வங்கி கணக்கிற்கு நல்லவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வாழ்வை உணர்வுபூர்வமாக முழுமையாக்கும் ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுங்கள்”  எனக்  குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தான் காதலில் இருப்பதை ஷாலு ஷம்மு உறுதிப்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.