சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

607150
607150

‘ஏ1’ படத்தின் வெற்றிக்கு பின் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகி இருக்கும் இதில் சந்தானம் தாதாவாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி 12-ஆம் திகதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.