பிரபல ஹிந்தி நடிகர் ராஜீவ் கபூர் மரணத்திற்கு நடிகை குஷ்பு இரங்கல்

rajiv kapoor dead
rajiv kapoor dead

பிரபல நடிகர் ராஜீவ் கபூர் மாரடைப்பால் தனது 58வது வயதில் காலமானார்.

ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ராஜீவ் கபூர். இவர் இன்று கடுமையான மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ராஜீவ் கபூர் பிரபல திரையுலக ஜாம்பவான்களான ரிஷி கபூர் மற்றும் ரந்தீர் கபூரின் சகோதரர் ஆவார்.

ராஜீவ் கபூரின் திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்சியடைய வைத்துள்ளது.

அவர் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை குஷ்புவின் டுவிட்டர் பதிவில், நான் அதிர்ச்சியில் உள்ளேன்.

நீங்கள் இவ்வளவு சீக்கிரம் போக கூடாது ,நான் தன்னம்பிக்கையுடன் பேசுவதற்கு நீங்கள் தான் காரணம்.

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என் அன்பான நண்பரே என பதிவிட்டுள்ளார்.