ரஷ்யா செல்லும் கோப்ரா படக்குழு

1614129346 7779
1614129346 7779

கோப்ரா படத்தின் மீதிக் காட்சிகளைப் படமாக்குவதற்காக படக்குழு ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் பாதிக் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட நிலையில் மீதிக் காட்சிகளையும் அங்கேயே படம் பிடிக்க வேண்டிய கடடாயத்தில் படக்குழு இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அங்கு செல்வது தாமதமாகிக் கொண்டே வந்தது. இப்போது கோப்ரா படக்குழு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.