ஹீரோவாக களமிறங்கும் மற்றொரு இசையமைப்பாளர்!

unnamed 64
unnamed 64

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது வந்தா மல, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார்.

கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் ஆரம்பமாகிறது.